தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்த பசு மீட்பு

பாவூர்சத்திரம், செப். 20:  பாவூர்சத்திரம் அருகே குறும்பலாப்பேரியில் தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்த பசுவை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். பாவூர்சத்திரம் அடுத்த குறும்பலாப்பேரி கீழ சிவஞானபுரம் தெருவைச் சேர்ந்தவர் குணசீலன் (45).  இவரது வீட்டில் வளர்ந்து வரும் பசு, அங்குள்ள தண்ணீர் தொட்டியில் எதிர்பாராமல் தவறி விழுந்து தத்தளித்தது. தகவலறிந்து விரைந்துவந்த சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்தர், ஏட்டு மாரியப்பன் மற்றும் ராஜா, கோட்டை முத்துக்குமார் உள்ளிட்ட வீரர்கள் கயிறு கட்டி மாட்டை உயிருடன் மீட்டனர்.

Advertising
Advertising

Related Stories: