விஷம்குடித்த இளம்பெண் சாவு

செங்கோட்டை, செப். 20:  . தென்காசி அடுத்த மேலப்பாவூர் சாலைத்தெருவைச் சேர்ந்த தங்கப்பாண்டியன் மகன் முத்துக்குமார் (28). இவருக்கும், செங்கோட்டை அடுத்த இலத்தூர் சங்கர் தெருவைச்  சேர்ந்த சுப்பிரமணியன் மகள் பார்வதி (எ) பானுவுக்கும் (24) கடந்த 3ஆண்டுகளுக்கு முன்னர்  திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. முத்துக்குமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால் இலத்தூரில் பெற்றோருடன் பார்வதி வசித்து வந்தார்.

கடந்த வாரம் மேலப்பாவூரில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்ற பார்வதியை மனம் புண்படும்படி மாமியார் பண்டாரத்தி பேசியதாகவும், இதனால் தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
Advertising
Advertising

தகவலறிந்து பார்வதியின் தந்தை வந்தபோது இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசில் புகார் கொடுத்தபிறகு பார்வதியை இலத்தூருக்கு தந்தை அழைத்துவந்தார். இதனால் விரக்தியடைந்த பார்வதி கடந்த 12ம் தேதி விஷம் குடித்தார். இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து தென்காசி  ஆர்.டி.ஓ. பழனிக்குமார் விசாரணை நடத்தி வரும்நிலையில், தகவலறிந்த கணவர் முத்துக்குமார் சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்பினார்.

Related Stories: