திருக்குறுங்குடி கடையில் புகையிலை பொருள் பதுக்கியவர் கைது

களக்காடு, செப். 20:  திருக்குறுங்குடி கடையில் புகையிலைப் பொருட்கள் பதுக்கியவரை போலீசார் கைதுசெய்தனர். களக்காடு அடுத்த திருக்குறுங்குடியில் செயல்படும் கடையில் அரசால் தடை  செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருக்குறுங்குடி எஸ்ஐ  சிவக்குமார் மற்றும் போலீசார் அந்த கடையில் சென்று சோதனையிட்டனர். இதில் அங்கு புகையிலை பொருட்கள் 9 பாக்கெட்களில் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல்செய்த போலீசார், இதுதொடர்பாக வழக்குப் பதிந்து கடையின் உரிமையாளரான நம்பிதலைவன் பட்டயத்தைச்  சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முத்துராஜாவை (20) கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: