மாணவர்கள் 3வது நாளாக போராட்டம்

திண்டிவனம், செப். 20: தேர்வு கட்டண உயர்வை  கண்டித்து திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வு  கட்டணம் ரூ.68ல் இருந்து 100 ரூபாயாக  உயர்த்தியதையும், தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தியும், 3வதுநாளாக நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு அமர்ந்து  மாணவ, மாணவிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்வி கட்டணத்தை உயர்த்திய கல்லூரி நிர்வாகம் மற்றும் பல்கலைக்கழகத்தினை கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்கள்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகளிடம் கல்லூரி நிர்வாகம்  மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அதில்  உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடந்து நடைபெற்றது. இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertising
Advertising

Related Stories: