ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி

திருக்கோவிலூர்,  செப். 20: திருக்கோவிலூர் அடுத்த சந்தப்பேட்டையில்  ஒருங்கினைந்த  குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாத விழா  விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை திருக்கோவிலூர் சார் ஆட்சியர்  ஸ்ரீகாந்த், மாவட்ட துணை கண்காணிப்பாளர் மகேஷ் ஆகியோர் கொடியசைத்து  துவக்கி வைத்தனர். பேரணியில் குழந்தைகள், வளர்இளம் பெண்கள், கர்ப்பிணி  பெண்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை வைத்துகொண்டு கோஷம் எழுப்பியபடி அங்கன்வாடி ஊழியர்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். இதில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கல்பனா,  உணவு பாதுகாப்பு அலுவலர் பிரசாந்த், மருத்துவர் கயல்விழி, துணை வட்டார  வளர்ச்சி அலுலர் சரவணன், மேற்பார்வையாளர் பாஞ்சாலி, வட்டார ஒருங்கினைப்பாளர் சரண்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: