×

பைக் விபத்தில் தீயணைப்பு வீரர் பலி

ஓட்டப்பிடாரம், செப்.20: ஓட்டப்பிடாரம் மேட்டூர் வ.உ.சி காலனியைச் சேர்ந்தவர் அழகர் மகன் மகேந்திரன்(22). இவர் ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று பைக்கில் தூத்துக்குடிக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். புதூர்பாண்டியாபுரம் பகுதியில் வரும்போது பின்னால் வந்த லாரி மோதியது. பலத்த காயமடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags : Firefighters ,bike accident ,
× RELATED சென்னையில் தீயணைப்பு வீரர்கள் 14...