தூத்துக்குடியில் மாற்று கட்சியினர் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தனர்

தூத்துக்குடி, செப். 20: தூத்துக்குடியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தனர்.அதிமுக, அமமுக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி மக்கள் நீதி மய்யத்தில் இணையும் விழா தூத்துக்குடியில் நடந்தது. விழாவிற்கு, தூத்துக்குடி தொகுதி தெற்கு பகுதி பொறுப்பாளர் வக்கீல் ரமேஷ் தலைமை வகித்தார். வடக்கு தொகுதி பொறுப்பாளர் பாலா, ஓட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர் அக்பர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், கிழக்கு தொகுதி பொறுப்பாளர் ஜவஹர் முன்னிலையில் பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் மக்கள் நீதி மய்யத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். இதில், பொறுப்பாளர்கள் முருகன், மணிகண்டன், மாணிக்கராஜ், ஈஸ்வரமூர்த்தி, பிரபாகரன், சேர்மதுரை, மதன், மனோ, கிஷோர், வழக்கறிஞர்கள் கோஸ்முகமது, பேச்சியம்மாள், மகேஷ்வரி, சுப்புராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags : Thoothukudi ,parties ,
× RELATED தூத்துக்குடி சின்னமணி நகரில்...