சிறப்பு கரும்பு அரவை நிறைவடைந்தது

சின்னசேலம், செப் 20: கச்சிராயபாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சிறப்பு கரும்பு அரவை பருவம் நிறைவடைந்து.  கச்சிராயபாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் பருவமழை பொழிவு  இல்லாததாலும், கடும் வறட்சியின் காரணமாகவும் கரும்பு வயல்கள் காய்ந்து  சருகானது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சிறப்பு கரும்பு அரவை பருவத்தை  உடனே துவக்க வேண்டும் என்று ஆலை நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.  இதையடுத்து ஆலையின் தலைவர் ராஜசேகர், மேலாண்மை இயக்குநர் சிவமலர் மற்றும்  இயக்குநர்கள் ஆலோசனையின்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம்தேதி சிறப்பு கரும்பு  அரவை துவங்கியது. அன்றுமுதல் நேற்று காலை வரை சுமார் ஒரு லட்சத்து  இரண்டாயிரம் டன் கரும்பு அரவை செய்து சிறப்பு கரும்பு அரவையின் இலக்கை  முடித்தது. விவசாயிகளின் நலன்கருதி முன்கூட்டியே சிறப்பு அரவையை துவக்கிய  ஆலை நிர்வாகத்திற்கு கரும்பு விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் கரும்பு வயல்கள் காய்ந்து போனது.  குறிப்பாக ஆலைக்கு அதிக கரும்பு வரும், கள்ளக்குறிச்சி, மூரார்பாளையம்  பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டதால் போதிய கரும்பு இல்லை. கரும்பு  இருந்தால் ஆலையை தொடர்ந்து இயக்கலாம்.

அதைப்போல கரும்பு முதிர்ச்சி  இல்லாததால் சர்க்கரை கட்டுமானம் குறைகிறது. இதனால் ஆலையை தொடர்ந்து இயக்க  முடியவில்லை. மீண்டும் வரும் டிசம்பர் மாதம் துவக்கி இன்னும் 2லட்சம் டன் கரும்பு  அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆலை நிர்வாக வட்டாரம்  தெரிவிக்கிறது.

Related Stories: