ஏரலில் முன்னாள் எம்எல்ஏ ஊர்வசி செல்வராஜ் பிறந்தநாள் விழா

ஏரல், செப்.20: ஏரலில் முன்னாள் எம்.எல்.ஏ ஊர்வசி செல்வராஜ் 69வது பிறந்தநாள் விழா காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. ஏரல் நகர தலைவர் பாக்கர்அலி தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட தலைவர் ராமன் முன்னிலை வகித்தார். காந்தி சிலை, ஊர்வசி செல்வராஜ் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் வைகுண்டம் வட்டார தலைவர் நல்லக்கண்ணு, நகரத் தலைவர்கள் பெருங்குளம் மூக்காண்டி, சாயர்புரம் ஜேக்கப், வைகுண்டம் சித்திரை, ஆத்தூர் பாலசிங், மாவட்ட ஒபிசி தலைவர் தாசன், ஏரல் நகர ஓபிசி தலைவர் அய்யம்பெருமாள், வட்டார மகளிரணி தலைவர் பஞ்சவர்ணம் மற்றும் நிர்வாகிகள் அந்தோணி காந்தி, பாரத், பிஸ்மிசுல்தான், சந்தனகுமார், சின்னத்துரை, மதிசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் காங்கிரஸ் சார்பில் பெருங்குளம், பண்ணைவிளை, சாயர்புரம் பகுதியிலும் ஊர்வசி செல்வராஜ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: