×

நாசரேத் அருகே தைலாபுரம் உபகார அன்னை ஆலய திருவிழா துவங்கியது

நாசரேத், செப்.20: நாசரேத் அருகேதைலாபுரம் உபகார அன்னை ஆலய திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தூத்துக்குடி மறை மாவட்ட பொருளாளர் சகாயம் தலைமை வகித்து கொடியேற்றினார். தூத்துக்குடி இனிகோ அச்சகம் இயக்குநர் ராஜேஷ் மறையுரையாற்றினார். பங்குத்தந்தை இருதயசாமி முன்னிலை வகித்தார். இதில் பிரகாசபுரம் பங்குத்தந்தை அந்தோணி இருதயதோமாஸ், இலங்கநாதபுரம் பங்குத்தந்தை ரத்தினராஜ் மற்றும் திரளான மக்கள் பங்கேற்றனர். இரவு7 மணிக்கு மிக்கேல் அதிதூதர் சப்பர பவனியும், 8 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடந்தது.  

தினமும் காலை ஜெபமாலை நவநாள் திருப்பலியும், மாலை ஜெபமாலை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது. 26ம்தேதி இரவு 7.30 மணிக்கு திருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. சென்னை பூந்தமல்லி பேராசிரியர் ஸ்டான்லி தலைமை வகிக்கிறார். பாளையங்கோட்டை முன்னாள் மறைமாவட்ட முதன்மைகுரு சேவியர்டெரன்ஸ்சு மறையுரையாற்றுகிறார். இரவு 10 மணிக்கு புனித உபகார அன்னையின் திருவுருவ சப்பரபவனி நடக்கிறது.

 27ம்தேதி காலை 6.30 மணிக்கு ஜெபமாலை, 7 மணிக்கு திருவிழா ஆடம்பரக் கூட்டுத்திருப்பலி நடக்கிறது. கோவை மறைமாவட்ட ஜான்பால் வின்செட் தலைமை வகிக்கிறார். காலை 11 மணிக்கு அன்னையின் திருவுருவ சப்பரபவனியும், இரவு 10 மணிக்கு கலைநிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை தைலாபுரம் பரிசுத்த உபகார அன்னை ஆலய பங்குத்தந்தை இருதயசாமி, வில்லியம்மேத்தா, கிறிஸ்டோபர், அசோக், சேசுராஜ், பிரதிஷ், ஜெரால்ட், பீட்டர் மற்றும் விழாக்குழுவினர், இறைமக்கள் செய்துள்ளனர்.


Tags : Talaipuram Upcountry Mother Temple Festival ,Nazareth ,
× RELATED நாசரேத் அருகே முதியவர் தற்கொலை