திண்டிவனம் நேரு வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

திண்டிவனம், செப். 20: திண்டிவனம் நேருவீதி காய்கறி மார்க்கெட், மளிகை கடைகள் நிறைந்த பகுதியாகும். செஞ்சி, திருவண்ணாமலை, பெங்களூர்,  வந்தவாசி, காஞ்சிபுரம், திருப்பதி உள்ளிட்ட ஊர்களுக்கு நேருவீதி வழியாக  தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. ஒரு வழிப்பாதையான நேரு வீதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும்  ஒரு வழிப்பாதையில் எதிர் திசையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வரும்  வாகனங்களால் அவ்வப்போது நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

Advertising
Advertising

இதனால் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக கடை வைத்து  வியாபாரம் செய்வதை தடுக்க திண்டிவனம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர்  கனகேஸ்வரி உத்தரவிட்டார். இதனடிப்படையில் திண்டிவனம் காவல் ஆய்வாளர்  சீனி பாபு, போக்குவரத்து ஆய்வாளர் ராமதுரை ஆகியோர் தலைமையிலான போலீசார்  நேரு வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர். மேலும் மீண்டும் சாலை ஓரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக கடை வைத்தால் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் எச்சரித்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் உதவி ஆய்வாளர் தமிழ்மணி, போக்குவரத்து உதவி ஆய்வாளர் கருப்பையன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.

Related Stories: