×

பைக் விபத்தில் இருவர்பலி

கயத்தாறு செப்.20: கயத்தாறு அருகேபுதுக்கோட்டை தெற்குதெருவைச் சேர்ந்தவர் சந்திரன்(64). இவர் கடந்த 9ம்தேதி  சந்திரன் கயத்தாறு -மதுரை மெயின் ரோட்டில் உள்ள ஒரு மரக்கடை முன்பாக தனது மொபட்டில் உட்காந்திருந்தார். அப்போது கயத்தாறு நோக்கி வேகமாக வந்த ராஜாபுதுக்குடி மலையரசன் குடியிருப்பைச் சேர்ந்த நடராஜன் மகன் செல்லத்துரை ஓட்டி வந்த பைக் சந்திரன் மேல் மோதியது. இதில் படுகாயமடைந்த சந்திரனை கயத்தாறு போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சந்திரனுக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவியும், சுப்புலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.தூத்துக்குடி:ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள செட்டியூரணியைச் சேர்ந்தவர் சக்கையா(48). இவர் நேற்று மாலை பைக்கில் தூத்துக்குடிக்கு வந்து விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். தாளமுத்துநகர்- தருவைகுளம் ரோட்டில் மாநகராட்சி உரக்கிடங்கு பகுதியில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு சென்றது. இதில் சக்கையா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

Tags : Bike accident ,
× RELATED சென்னையிலிருந்து மதுரை செல்ல...