1234 கிராம சுகாதார செவிலியர் பணி சான்றிதழ் சரிபார்ப்பு

விழுப்புரம்,  செப். 20: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்தி  குறிப்பு: தமிழ்நாடு மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியத்தால் 1234 கிராம  சுகாதார செவிலியர் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இப்பணிக்கு தமிழக அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில்  ஆக்ஸிலரி நர்ஸ் மிட்வொய்ப் அல்லது மல்ட்டி பர்ப்பஸ் ஹெல்த் வொர்க்கர்  சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சிலில்  பதிவு செய்திருக்க வேண்டும்.

Advertising
Advertising

இப்பணி காலியிடத்திற்கான பதிவுதாரர்களை,  விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்  பரிந்துரை செய்யப்பட உள்ளது. கல்வித்தகுதியினை பெற்றுள்ள மாவட்ட  வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள், தங்களது கல்வித்தகுதியினை  உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில், அனைத்து அசல் கல்விச்சான்றுகள் மற்றும்  வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் வரும் 24ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு  அலுவலகத்தை தொடர்புகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: