மின்சாரம் தாக்கி பெண் பலி

தூத்துக்குடி,செப்.20: தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்தவர் சாகுல்ஹமீது என்ற தங்கவாப்பா. இவரது மனைவி நபிலா(39). கணவன்-மனைவி இருவரும் வீட்டில் சம்சா தயார் செய்து கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம்போல நபிலா வீட்டில் வெங்காயம் வெட்டும் இயந்திரம் மூலம் வெங்காயம் வெட்டுவதற்காக இயந்திரத்தின்சுவிட்சை ஆன் செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் வீட்டின் சுவரில் மோதியதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார், எஸ்ஐ ராஜாமணி ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: