தூத்துக்குடி ரேஷன் கடைகளில் முறைகேடு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிப்பு

தூத்துக்குடி, செப். 20: தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் அதிகாரிகள் குழுவினர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்  இந்துமதி உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் 56 நியாயவிலைக் கடைகளில் பறக்கும்படை குழுவினர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது அத்தியாவசியப் பொருள்களான அரிசி, சர்க்கரை, கோதுமை. மண்ணெண்ணெய். சிறப்பு பொதுவிநியோகத் திட்ட பொருள்களான துவரம் பருப்பு. சமையல் எண்ணெய். ஆகிய பொருள்களில் இருப்பு குறைவு ஏற்படுத்தியது தெரிய வந்தது.இதன் மூலம் அரிசி 87 கிலோ. சர்க்கரை 124  கிலோ மற்றும் சிறப்பு பொதுவிநியோகத் திட்டப் பொருள்கள் முறைகேடான வகையில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையெடுத்து, முறைகேடுகளில் ஈடுபட்ட விற்பனையாளர்களுக்கு ரூ. 12 ஆயிரத்து 125 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

Related Stories: