சோனியா, ராகுல் குறித்து அவதூறு பேச்சு அமைச்சர் உருவபடத்தை எரித்து காங்கிரசார் சாலை மறியல்

கோவில்பட்டி, செப்.20:காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை அவமரியாதையாக பேசிய அமைச்சரை கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரசார் கட்சியினர் அவரது உருவபடத்தை எரித்து மறியலில் ஈடுபட்டனர். 15 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை தொடர்ந்து அவதூறாக பேசி வருவதை கண்டித்தும், அவரை அமைச்சர் பதவியில் இருந்த நீக்கவேண்டும் என வலியுறுத்தியும், அவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்ககோரி கோவில்பட்டியில் காங்கிரஸ் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட பொருளாளர் கேசவன் தலைமையில் நகர தலைவர் சண்முகராஜ் முன்னிலையில் காந்தி மண்டபத்தில் இருந்து அமைச்சரின் உருவபடத்தை கையில் ஏந்தி கொண்டு, அவரை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று பயணியர் விடுதி முன்பு திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென காங்கிரசார் அமைச்சரின் உருவபடத்தை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அமைச்சரின் உருவபடத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட மாவட்ட பொருளாளர் கேசவன், நகர தலைவர் சண்முகராஜ், மாவட்ட துணைத்தலைவர் அய்யலுச்சாமி, மாவட்ட பொதுசெயலாளர் முத்து, சுப்பாராயலு, வட்டார தலைவர் ரமேஷ்மூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் வீரபெருமாள், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ராஜா, எஸ்சி, எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் மாரிமுத்து, வழக்கறிஞர் பிரிவு மகேஷ்குமார், ராஜேந்திரன், யோசுவா, நகர துணைத்தலைவர் ராமச்சந்திரன் உட்பட 15 பேரை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையில் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: