×

திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் கலெக்டரின் சிறப்பு வேளாண் திட்டம் செயல்படுத்த 9 கிராமங்கள் தேர்வு

திருத்துறைப்பூண்டி, செப்.20: திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் கலெக்டரின் சிறப்பு வேளாண் திட்டங்கள் செயல்படுத்த 9 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். இது குறித்து திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவிஇயக்குனர் சாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் முலம் கலெக்டரின் சிறப்பு திட்டமாகஅனைத்து வேளாண் திட்டங்களையும் மற்றும் தோட்டக்கலைத்துறையின் திட்டங்களையும் ஒருங்கிணைந்து தேர்வு செய்யப்பட்டகிராமங்களில் செயல்படுத்தி முன் மாதிரியாகஅமைத்து மற்ற கிராமவிவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிகமகசூல் அதிக வருமானம் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி கொத்தமங்கலம், ஆண்டாங்கரை, பனையூர், வேளூர், கச்சனம், தீவாம்மாபுரம், ஆலத்தம்பாடி, விளக்குடி, கட்டிமேடு ஆகிய 9 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டஅனைத்து கிராமங்களிலும் உள்ள சம்பா வயல் வரப்புகளில் பபறுவகை பயிர்கள் , வெண்டை , செண்டிப்பூ , மற்றும் பூசணிவகைகாய்கறிகள் சாகுபடி செய்து நெல் வயலின் சுற்றுச் சூழலை மேம்படுத்தி பூச்சி நோய்களை இயற்கை முறையில் கட்டுப்படுத்தவும் கூடுதல் வருமானம் பெறவும், காய்கறிகள் , பயறுவகை பயிர்கள்மூலம் வைட்டமீன் உயிர் சத்துக்கள்மற்றும் புரதசத்து அதிகமுள்ள உணவுகளை தயாரித்து உண்பதன் மூலம் விவசாயிகள் வீட்டில் உள்ள மகளிர் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் போஷன் அபிமான் திட்டம் , நுண்ணுயிர் திட்டம் , அட்மா திட்டம் முதலியதிட்டங்கள் இந்த கிராமங்களில் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வயல் வரப்புகளில் உளுந்து சாகுபடி திட்டம் அக்டோபர் மாதகடைசிவாரத்தில் துவக்கப்படும் என உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.


Tags : villages ,region ,Collector ,Tiruchirapuram ,
× RELATED கிராமங்களில் சலூன் கடைகள் திறப்பு:...