முத்துப்பேட்டையில் கனமழை

முத்துப்பேட்டை செப்:20 : முத்துப்பேட்டையில் நேற்று காலை முதல் மாலை வரை கடும் வெயில் அடித்தது. மாலை சுமார் 3.45மணியளவில் திடீரென்று சூறைக்காற்று வீச துவங்கியது. பின்னர் மாலை 4மணிக்கு மிதமாக பெய்ய துவங்கிய மழை கனமழையாக மாறி இரவு 8மணிக்குமேல் தொடர்ச்சியாக இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. முத்துப்பேட்டை பகுதியில் காவிரிநீர் சென்றடையாத நீர்நிலைகளில் ஓரளவு தண்ணீர் நிரம்பியது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.


Tags :
× RELATED திண்டிவனத்தில் திடீர் மழை