×

வலங்கைமான் அருகே இரு பாசன வாய்க்கால்களை பிரிக்கும் விதமாக தடுப்பு சுவர் அமைக்காவிட்டால் சாலை மறியல்

வலங்கைமான், செப். 20: வலங்கைமான் அடுத்த புலவர்நத்தம்-சாத்தனுர் சாலையில் ஊரகவளர்ச்சித்துறையால் கட்டப்படும் மதகு அருகே இரு பாசன வாய்க்கால்களை பிரிக்கும் விதமாக தடுப்புசுவர் கட்டாததால் மேட்டு வாய்க்காலுக்கு தண்ணீர் செல்லாததை அடுத்து விவசாய பணிகளை துவங்க முடியாத விவசாயிகள் சாலை மறியல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.டெல்டா மாவட்டங்களின் பாசணத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது. இயந்திர நடவு, கை நட மற்றும் நேரடி விதைப்பு மூலம் சாம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் புலவனாற்றிலிருந்து 3/0 ரெகுலேட்டரிலிருந்து கல்லுக்குடி வாய்க்கால், மற்றும் மேட்டு வாய்க்கால்கள் என இரண்டு வாய்க்கால்கள் அருகருகே பிரிகின்றது. இவை தலைப்பிலிருந்து சுமார்3கிமீ தூரத்தினை கடந்து பின்னர் பாசனத்திற்கு பயன் படுத்தப்படுகின்றது. கல்லுக்குடி வாய்க்காலின் மூலம் சேரநத்தம், கல்விக்குடி, மாணிக்கமங்கலம், வேடம்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகின்றது. அதே போன்று மேட்டு வாய்க்கால் மூலம் புலவர்நத்தம், நரிக்குடி, பாப்பாக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 400 ஏக்கர் பாசனவசதி பெறுகின்றது.

இந்நிலையில் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் புலவர்நத்தம் பேருந்து நிறுத்தம் பகுதியிலிருந்து சாத்தனூர் வரை சாலை அமைக்கும் பணி கடந்த மூன்று மாதத்திற்கு முன் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இப்பணியின் ஒரு கட்டமாக புலவர்நத்தம் அருகில் புதிதாக போடப்படும் சாலையில் கல்லுக்குடி மற்றும் மேட்டு வாய்க்காலில் சிறிய பாலம் கட்டும் பணி முடிவுற்ற நிலையில் பாலத்திற்கு அருகில் அருகருகே செல்லும் இரண்டு பாசன வாய்க்கால்களை தனித்தனியே பிரிக்கும் விதமாக தடுப்பு சுவர் அமைக்கப்டவில்லை. இதன் காரணமாக பாசனத்திற்காக தனித்தனியே 3 கிமீ தூரம் வந்த தண்ணீர் பாலத்திற்கு அருகே தடுப்பு சுவர் கட்டாத பகுதிக்கு வந்தபின் இரண்டு வாய்கால்களும் ஒன்று சேர்ந்து விடுகிறது. இதில் கல்லுகுடி வாய்க்கால் மேட்டு வாய்க்காலைவிட சற்று அகலமாகவும், ஆழமாகவும் உள்ளதால் தண்ணீர் மேட்டு வாய்க்காலில் தொடர்ந்து செல்லாமல் கல்லுக்குடி வாய்க்காலில் சென்று விடுகிறது. அதனால் மேட்டு வாய்க்காலில் போதிய தண்ணீர் வரவில்லை. முன்னதாக மேட்டு வாய்க்கால் தூர்வாராத நிலையில் வந்த சிறிதளவு தண்ணீரும் கல்லுக்குடி வாய்க்காலில் செல்வதால் மேட்டு வாய்க்கால் பாசன விவசாயிகள் சம்பா சாகுபடிபணியை துவங்க முடியாத நிலை உள்ளது. எனவே அரசு ஊரக வளர்ச்சித்துறை யால் கட்டபட்ட மதகின் அருகே இரண்டு வாய்க்கால்களையும் தனித்தனியே பிரிக்கும் விதமாக தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி தேக்கினால் மட்டுமே மேட்டு வாய்க்கால் விவசாயிகள் சாகுபடியை துவங்க இயலும். எனவே அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நடவடிக்கையை அரசு எடுக்காவிட்டால்புலவர் நத்தம் பேரூந்து நிறுத்தம் பகுதியில் விவசாயிகளை ஒன்று திரட்டி சாலைமறியல் மேற்கொள்ளப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.விவசாயிகள் அறிவிப்புமேட்டு வாய்க்காலில் போதிய தண்ணீர் வரவில்லை. முன்னதாக மேட்டு வாய்க்கால் தூர்வாராத நிலையில் வந்த சிறிதளவு தண்ணீரும் கல்லுக்குடி வாய்க்காலில் செல்வதால் மேட்டு வாய்க்கால் பாசன விவசாயிகள் சம்பா சாகுபடிபணியை துவங்க முடியாத நிலை உள்ளது.

Tags : irrigation canals ,Valangaiman ,road ,
× RELATED வலங்கைமான் பகுதியில் வேகமாக குறைந்து...