×

கலெக்டர் தகவல் வங்கியில் ஊழியர் பற்றாக்குறை கண்டித்து ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

முத்துப்பேட்டை, செப்.20: முத்துப்பேட்டையில் உள்ள ஸ்டேட் வங்கியில் சமீபகாலமாக ஊழியர்கள் பற்றாக்குறையால் பல்வேறு பணிகள் பாதிப்படைந்துள்ளது. இதனால் சுற்றுபகுதியை சேர்ந்த மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து வங்கி வாடிக்கையாளர்கள் உயர்அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்றும் போதிய பணியாளர்கள் நியமனம் செய்யவில்லை.இதனால் விரக்தியடைந்த தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதன் படி நேற்று முத்துப்பேட்டை தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஊழியர்கள் பற்றாக்குறையை சரி செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதற்கு கிளைத்தலைவர் கோவி.ரங்கசாமி தலைமை வகித்தார். கிளைத்துணைத்தலைவர் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார்.கிளை செயலாளர் செல்லத்துரை கோரிக்கை குறிதது விளக்கி பேசினார். இதில் பலவேறு அமைப்பினர் கலந்துக்கொண்டனர். முடிவில் கிளை பொருளாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.


Tags : union ,Pensioners ,Collector ,Information Bank ,
× RELATED நாடு முழுவதும் நடைபாதை வியாபாரிகள் 50...