மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஒரத்தநாடு, செப். 20: ஒரத்தநாடு அருகே உள்ள கோவிலூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). இவர் அருகில் உள்ள தெலுங்கன்குடிகாடு கிராமத்தில் உள்ள சிவபெருமான் என்பவர் வீட்டில் ஒரு கொட்டகை அமைக்கும் வேலை செய்தார். வேலை முடிந்ததும் அருகில் உள்ள ரவி என்பவரது வீட்டில் உள்ள போர்வெல்லில் குளித்தார். அப்போது மின்சாரம் தாக்கி ராஜேந்திரன் பலியானார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED தொழிலாளி கைது