அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, செப். 20: அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து தஞ்சை பனகல் கட்டிடம் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை தரக்குறைவாக விமர்சனம் செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் குணா பரமேஸ்வரி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் கலைச்செல்வன், முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சில் வரதராஜன் உள்ளி–்ட்ட பலர் பங்கேற்றனர்.

Advertising
Advertising

மதுபாட்டில் விற்பனை செய்த வாலிபர் கைது

திருவையாறு, செப். 20: திருவையாறு அருகே அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.திருவையாறு அடுத்த மேலத்திருப்பூந்துருத்தியை சேர்ந்த சுயம்பிரகாசம் மகன் செல்வேந்திரன் (38). இவர் திருப்பூந்துருத்தி நடுப்பாலம் அருகே 50 மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருப்பதாக தகவல் வந்தது. அதன்பேரில் நடுக்காவேரி சப்இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்வேந்திரனை பிடித்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: