×

பைராகித்தோப்பு குளத்தில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம்

கும்பகோணம், செப். 20: கும்பகோணம் நால்ரோட்டில் அருகில் உள்ள பைராகித்தோப்பு குளத்தில் கழிவுநீர் கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயத்தில் பொதுமக்கள் உள்ளனர்.கும்பகோணம்- திருவிடைமருதூர் சாலையில் பைராகித்தோப்பு குளம் 40 ஆயிரம் சதுர அடியில் உள்ளது. இந்த குளம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமானதாக இருந்தது. அதன்பிறகு பராமரிப்புக்காக நகராட்சி வசமானது. இந்நிலையில் 2016ம் ஆண்டு மகாமக விழா நடந்ததையொட்டி கும்பகோணத்தில் உள்ள குளங்களை கண்டுபிடித்து தூர்வார வேண்டுமென கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து கும்பகோணத்தில் உள்ள அனைத்து குளங்களை கண்டறிந்து தூர்வாரினர். அதன்படி ரூ.53 லட்சம் மதிப்பில் பைராகித்தோப்பு குளம் தூர்வாரும் பணி நடந்தது. மேலும் குளத்தை சுற்றிலும் சிமென்ட் கட்டைகள் கட்டப்பட்டது. இதனால் குளத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. ஆனால் குளத்தை சுற்றிலும் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி குளத்தில் கலந்ததால் துர்நாற்றம் வீச துவங்கியது.இந்த குளத்தின் அருகில் பள்ளிகளும், மகப்பேறு மருத்துவமனைகளும் உள்ளது. குளத்திலிருந்து வரும் துர்நாற்றத்தால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பைராகித்தோப்பு குளத்தில் ஆகாய தாமரை செடிகள் மண்டியுள்ளதால் கொசுக்கள், விஷ ஜந்துக்கள் பெருகி வருகிறது. எனவே கும்பகோணம் பைராகித்தோப்பு குளத்தை தூர்வாரி ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி கழிவுநீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தெரிவி–்த்துள்ளனர்.

இதுகுறித்து வாய்க்கால், குளம் பாதுகாப்போர் சங்க தலைவர் கண்ணன் கூறுகையில், மகாமக விழாவுக்கு முன் பைராகி குளத்தை ரூ.53 லட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்டது. இதில் குளத்தை சுற்றிலும் கான்கிரீட் சுவர்கள், படிக்கட்டுகள் கட்டப்பட்டது. ஆனால் குளத்தில் வீடுகளில் இருந்து கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதே நிலை நீடித்தால் பொதுமக்களுக்கு நோய் பரவம் அபாயம் உள்ளது. எனவே குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதுடன் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்றார்.

Tags : pond ,
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்