×

முன்விரோத தகராறில் வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது

கும்பகோணம், செப். 20: கும்பகோணத்தில் முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.கும்பகோணம் இந்திரா காந்தி சாலையில் வசிப்பவர் சேகர் மகன் கார்த்திக் (30). அண்ணலக்ரஹாரம் பெருமாள் கோவில் தெருவில் வசிப்பவர் முருகேசன் மகன் சின்னராசு (எ) வெங்கடேசன் (29). இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் இந்திராகாந்தி சாலைக்கு சென்ற வெங்கடேசன், கார்த்திக்கிடம் தகராறு செய்தார். அப்போது அங்கிருந்த கடையில் இருந்த கத்தியை எடுத்து கார்த்திக்கை சரமாரியாக வெங்கடேசன் குத்தினார். பின்னர் அங்கிருந்து வெங்கடேசன் தப்பியோடிவி–்ட்டார். இதில் படுகாயமடைந்த கார்த்திக்கை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து வெங்கடேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags :
× RELATED பைக் திருடி ஆன்லைனில் விற்றவர் கைது