×

புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் மீது வழக்கு

திருக்காட்டுப்பள்ளி, செப் 20: பூதலூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 5 கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பூதலூர் கடைவீதி மேம்பாலம் அருகில் உள்ள கடைகள், செங்கிப்பட்டி சாலையில் உள்ள கடைகள், ரயிலடி மற்றும் பாரி காலனியில் உள்ள கடைகளில் பூதலூர் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அரசால் தடை செய்துள்ள புகையிலை பொருட்களான ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட பொருட்கள் 500க்கு மேல் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் முகமதுஅலிகான், ஆசைதம்பி, வெங்கடேசன், சாமிநாதன், தேவேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : persons ,
× RELATED கொரோனா பரவாமலிருக்க புகையிலை...