தரிசாக கிடக்கும் வயல்கள் பாபநாசம் பகுதியில் பலத்த மழை வயல்களை சூழ்ந்து நிற்கும் தண்ணீர்

பாபநாசம், செப். 20: பாபநாசம் பகுதியில் பலத்த மழை பெய்ததால் வயல்களில் வடிய முடியாமல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த மழைநீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் கடந்த ஒருவாரமாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 17ம் தேதி இரவும் பாபநாசம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இரவு 10 மணிக்கு துவங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது. பின்னர் விடியற்காலை வரை மழை தூறல் இருந்தது. இந்த மழையால் பாபநாசம் பகுதியில் உள்ள வயல்களில் மழைநீர் வடிய முடியாமல் தேங்கி நின்றது. இதைதொடர்ந்து வயல்களில் தேங்கிய மழைநீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.Tags :
× RELATED வயல்களில் கிராவல் அள்ள எதிர்ப்பு