பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத மட்டையாந்திடல் வாய்க்கால்

தஞ்சை, செப். 20: பாபநாசம் அருகே மட்டையாந்திடல் வாய்க்கால் தூர்வாரப்படாததால் பாசன வசதியின்றி வயல்கள் தரிசாக கிடக்கிறது. எனவே வாய்க்காலை விரைந்து தூர்வார வேண்டுமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.பாபநாசம் அருகே மட்டையாந்திடல் கிராம பகுதியில் மட்டையாந்திடல் வாய்க்கால் மூலம் 500 ஏக்கர் பாசனம் பெறுகிறது. ஆனால் இந்த வாய்க்கால் கடந்த 20 ஆண்டுகளில் ஒருமுறை கூட தூர்வாரப்படவில்லை. இதனால் 20 அகலம் கொண்ட வாய்க்கால் தூர்ந்துபோய் தற்போது 4 அடியாகிவிட்டது. இதனால் மட்டையாந்திடல், கருப்பூர், மேலசெம்மங்குடி, சோலை, பூஞ்சேரி, தெற்குநாயகன்பேட்டை உள்ளிட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் இந்த வாய்க்காலை தூர்வார வேண்டும். ஒரு காலத்தில் முப்போகம் விளைந்த இப்பகுதியில் தற்போது ஒருபோகம் கூட சாகுபடி செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள பல கன்னிவாய்க்கால்களும் தூர்ந்துபோய் காணாமல் போய்விட்டது. இதனால் இப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தரிசாக கிடக்கிறது.எனவே உடனடியாக இப்பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூர்வாரி பாசனத்துக்கு ஏற்பாடு செய்ய கலெக்டர் உத்தரவிட வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: