கொல்லைப்புற ஊழியர்களை டிஸ்மிஸ் செய்ய கோரிக்கை

புதுச்சேரி, செப். 20:    லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய செயலாளர் உமாசுதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாழ்த்தப்பட்டோர் 2 பேருக்கு வேலை வழங்க வேண்டுமென சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை மதிக்காமல் மேல்முறையீடு செய்துள்ள புதுவை பொறியியல் கல்லூரி நிர்வாகம், கொல்லைப்புறமாக பணியில் அமர்த்தப்பட்ட 25 ஊழியர்களின் பணிநியமனம் தவறு என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் அந்த 25 ஊழியர்கள் மீது 14 மாதமாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கொல்லைப்புற ஊழியர்களை உடனே பணிநீக்கம் செய்து விட்டு சட்டவிதிகளுக்கு உட்பட்டு புதிதாக ஊழியர்களை நியமிக்க கவர்னரும், தலைமை செயலரும், முதல்வரும் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: