வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டம்

தஞ்சை, செப். 20: தஞ்சையில் தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தங்க.பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தரும.கருணாநிதி வரவேற்றார். கூட்டத்தில் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.இதைதொடர்ந்து மாவட்டத்தில் துணை தாசில்தார் நிலையில் தகுதிகாண் பருவமும், பணி வரன்முறை ஆகியவற்றை காலதாமதமின்றி வரன்முறைப்படுத்த வேண்டும். காவலர் பயிற்சிக்கு 8 துணை தாசில்தார்களை உடனடியாக அனுப்ப வேண்டும். துணை தாசில்தார் நிலையில் காலியாக உள்ள பணியிடங்களை பதவி உயர்வு அளித்து நிரப்ப வேண்டும். வருவாய் கோட்ட அலுவலகங்களில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பிறப்பு, இறப்பு பதிவு மேற்கொள்ளும் பணிக்கான இருக்கை மற்றும் தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைபடுத்துதல் சட்டம் 2017க்கான இருக்கைக்கும் தனித்தனியாக முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertising
Advertising

Related Stories: