இந்திராநகர் அரசு பள்ளியில் ஆசிரியர் நாள் விழா

புதுச்சேரி, செப். 20:   புதுவை இந்திராநகர் இந்திராகாந்தி அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் நாள் விழா நடந்தது. பள்ளி முதல்வர் கேசவ் தலைமை தாங்கினார். விரிவுரையாளர் சந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி தலைமை தாங்கினார். கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற பொதுத்தேர்வில் 10, 11, 12ம் வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் ரங்கசாமி கைக்கடிகாரம் பரிசாக வழங்கினார். அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பள்ளியின் சார்பாக பரிசு வழங்கப்பட்டன. மேலும், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளையும் சால்வை அணிவித்து சிறப்பித்தார். 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஜெயபால் எம்எல்ஏ., மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: