சுவாமிமலையில் இன்று மக்கள் குறைதீர் முகாம்

கும்பகோணம், செப். 20: சுவாமிமலை கிராமத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று (20ம் தேதி) நடக்கிறது.இதுகுறித்து தாசில்தார் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கும்பகோணம் தாலுகா சுவாமிமலை கிராமத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று (20ம் தேதி) நடக்கிறது. முகாமில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். எனவே ஒரே நாளில் முடிவு செய்யக்கூடிய ஜாதி சான்று, வருமானம், இருப்பிடம், பிறப்பு இறப்பு, முதல் பட்டதாரி போன்ற சான்றுகளுக்கான உரிய படிவத்தில் ஆதார ஆவணங்களை இணைத்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனு கொடுத்து பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: