விரைந்து சீரமைக்க வலியுறுத்தல் வேளாண் மண்டலமாக அறிவிக்ககோரி காவிரி படுகை கூட்டியக்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, செப். 20: காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்ககோரி தஞ்சை ரயில் நிலையம் முன் காவிரி படுகை கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் (மா. கம்யூ.) தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். ஜனநாயக முறையில் உரிமைக்காக போராடும் பொதுமக்கள் மீது பொய் வழக்குகளை போட கூடாது. ஆம்பலாப்பட்டு, சூரக்கோட்டை, அம்மாப்பேட்டை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீதம், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்தகோரி கலெக்டரிடம் மனு கொடுக்கும் இயக்கத்தை நடத்திவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும். பெட்ரோலிய குழாய் பதிக்கும் பகுதிகளில் மக்களை அழைத்து பேச வேண்டும்.

மக்களை அச்சுறுத்தும் போக்கை கைவிட வேண்டும். சூரக்கோட்டையில் பெட்ரோலிய குழாய் பதிப்பதை கண்டித்து போராடியவர்கள் மீது கோட்டாட்சியர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வழக்குப்பதிவு செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் செந்தில், நிர்வாகிகள் வீரமோகன், பாலசுந்தரம், தாளாண்மை உழவர் இயக்க தலைவர் திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பழனிராஜன், தமிழர் தேசிய முன்னணி பொது செயலாளர் அயனாவரம் முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் ஜெகதீசன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தில்லைவனம், அருண்சோரி, துரை.மதிவாணன் பங்கேற்றனர்.

Related Stories: