×

பைக் விபத்தில் தொழிலாளி படுகாயம்

பாகூர், செப். 20:  கடலூர் அருகே உள்ள புதுச்சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (26). கூலித்தொழிலாளியான இவருக்கு காலில் அடிபட்டுள்ளது. சம்பவத்தன்று தவளக்குப்பம் அருகே உள்ள அபிஷேகப்பாக்கத்தில் வைத்தியரிடம் மாவு கட்டு போட்டுவிட்டு நண்பருடன் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கடலூர்- புதுச்சேரி சாலையில் கிருமாம்பாக்கம் அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மோட்டார் பைக்கில் வந்து இவர்கள் மீது மோதியுள்ளார். இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : bike accident ,
× RELATED பைக் விபத்தில் வாலிபர் பலி