புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிரான ஸ்டிரைக்

புதுச்சேரி, செப். 20:  புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் நடைபெற்று வரும் நிலையில் புதுச்சேரியில் 1000 லாரிகள் ஓடவில்லை. இதனால் கோடிக்கணக்கிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ேமாட்டார் வாகன சட்டத் திருத்தம் செய்து சாலை விதிகளை மீறுபவர்களுக்கான அபராத தொகையை உயர்த்தியுள்ளது. இதை மறுபரிசீலனை செய்யக்கோரி அகில இந்திய மோட்டார் வாகன போக்குகூரத்து காங்கிரஸ் ஒருநாள் நேற்று (19ம்தேதி) அடையாள வேலை நிறுத்தம் அறிவித்தது. அதன்படி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு புதுச்சேரி லாரி உரிமையாளர் சங்கமும் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், நேற்று பெரும்பாலான லாரிகள் இயங்கவில்லை.அதிகாலையில் பெரிய மார்க்கெட்டில் சரக்குகளை இறக்கிவிட்டு சென்ற லாரிகள் மட்டுமின்றி மற்ற லாரிகளும் மாநில எல்லை பகுதிகளிலும், மேட்டுப்பாளையம் கனரக ஊர்தி முனையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

 காலை 6 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த போராட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட லாரிகள் பங்கேற்றதால் கோடிக்கணக்கில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், கடைகளுக்கு வியாபார பொருட்களை லாரிகள் ஏற்றிச் செல்லவில்லை. இதனால் சரக்கு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் குறித்து லாரி உரிமையாளர் சங்க செயலாளர் குமார் கூறுகையில், அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அறிவித்த வேலை நிறுத்தத்தில் புதுச்சேரி லாரி உரிமையாளர் சங்கமும் பங்கேற்றிருப்பதால் ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. மத்திய அரசின் புதிய சட்டத்தால் லாரி தொழிலே நடத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. இதை உடனே மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

Related Stories: