×

மணல் அள்ளிய மினி டெம்போ பறிமுதல்

விருத்தாசலம், செப். 20: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மற்றும் போலீசார் கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நேமம் பேருந்து நிறுத்தம் அருகே வேகமாக வந்த மினி டெம்போவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில் நேமம் வெள்ளாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து மினி டெம்போவை போலீசார் பறிமுதல் செய்து கருவேப்பிலங்குறிச்சி காவல்நிலையத்துக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து மினி டெம்போவை ஓட்டி வந்த டி.வி.புத்தூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் சேகர் (28) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED புதுச்சத்திரம் அருகே பெயிண்ட் ஏற்றி...