×

ஆயக்காரன்புலம் கைலாசநாதசுவாமி கோயிலில் மழை வேண்டி விளக்கு பூஜை

வேதாரண்யம், செப்.20:ஆயக்காரனம்புலம் 1ம் சேத்தி கைலாசநாத சுவாமி கோயிலில் மழை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் 1ம் சேத்தியில் அமைந்துள்ள கைலாசநாதசுவாமி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இக்கோயிலில் உலக நன்மை வேண்டியும், பருவமழை பெய்து விவசாயம் செழிக்கவும் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை நடத்தினர். முன்னதாக சுவாமிக்கு பல்வேறு விதமான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டை கிராம வாசிகள் செய்திருந்தனர்.


Tags : Rainy Lighting Pooja ,
× RELATED பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நாள் ஒன்றுக்கு 2000 மாஸ்க் தயாரிப்பு