×

பிளக்ஸ், பிரின்ட் உரிமையாளர் சங்கம் கோரிக்கை விரைவில் சீரமைக்க கோரிக்கை புதுச்சேரி மாநிலம் முழுவதும் பேனர்களை அகற்ற வலியுறுத்தல்

காரைக்கால், செப்.20: இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தலைவர் அனந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: பேனர் கலாச்சாரத்தால் சென்னையில் ஓர் உயிர் போன பிறகும், புதுச்சேரியில் அனுமதி பெற்று பேனர் வைக்கலாம் என ஆட்சியாளர்கள் கூறுவது வேடிக்கையாக உள்ளது. அனுமதி பெற்று பேனர் வைத்தாலும் காற்றில் விழத்தான் செய்யும். அதுபோன்ற சமயத்தில் அரசுதான் உரிய நஷ்ட ஈட்டை வழங்கவேண்டும்.அதேபோல், சாலைகளில் வைக்கும் பல பேனர்கள் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புவதாகவும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் உள்ளது. எனவே, அனுமதி, அனுமதி இல்லை என்ற பாகுபாடு பார்க்காமல் அனைத்து பேனர்களையும் உடனே அகற்றவேண்டும். அது ஏற்கெனவே வைத்தாலும் சரி, சொந்த இடத்தில் வைத்தாலும் சரி, எங்கு இருந்தாலும் அதனை உடனே அகற்ற அரசு முன்வரவேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக பேனர் தடை சட்டம் புதுச்சேரில் அமலில் இருப்பதை அரசு மறந்து
விடக்கூடாது என்றார்.

Tags : Print Owners' Association ,Puducherry State ,
× RELATED தர்மபுரி மண்டலத்தில் பொது போக்குவரத்துக்கு தயார் நிலையில் பஸ்கள்