×

அரசு கல்லூரி நுழைவு வாயிலில் திருவள்ளுவர் சிலை அமைக்க கோரிக்கை

விருத்தாசலம், செப். 20: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரியின் புதிய முதல்வராக ஏற்கனவே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய முனைவர் ராஜவேல் பொறுப்பேற்றார். அவருக்கு முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துடன் இணைந்த கல்லூரி நுழைவாயில் முன் திருவள்ளுவர் சிலை அமைக்கவும், பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதில் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் சுந்தரபாண்டியன், துணைத்தலைவர் புஷ்பதேவன், இணைச்செயலாளர் ஜெயப்பிரகாஷ், பொருளாளர் வழக்கறிஞர் அப்துல்லா, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் விஸ்வநாதன், அரசு வழக்கறிஞர் இளையராஜா, வழக்கறிஞர் குபேரமணி, சிம்லாசங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Tiruvalluvar ,Government College ,entrance ,
× RELATED சென்னை அருகே திருமுல்லைவாயலில் உள்ள...