×

மத்திய அரசின் பட்டியல் இனத்தவர்களுக்கு இயற்கை நெல் சாகுபடி திட்ட பயிற்சி

விருத்தாசலம், செப். 20: இயற்கை வேளாண்மையை விவசாயிகளிடம் முன்னெடுத்து கொண்டு செல்லும் வகையில், இந்திய ஆராய்ச்சி குழுமம் மூலம் மத்திய அரசின் 2019-20ம் ஆண்டுக்கான பட்டியல் இனத்தவர்களுக்கான இயற்கை நெல் சாகுபடி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டமானது, தமிழகத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் மூலம் மத்திய அரசின் பட்டியல் இனத்தவர்களுக்கான நெல் சாகுபடி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதன் முதலாக கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கார்மாங்குடி கிராமம் தேர்வு செய்யப்பட்டு, அக்கிராமத்திலுள்ள
25 விவசாயிகளை தேர்ந்தெடுத்து இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதில், விதை முதல் அறுவடை வரை தொழில்நுட்பம், உரம், முழு மானியத்தில் இடுபொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதற்கான விளக்க பயிற்சி கூட்டம் விருத்தாசலம் வேளாண்மை அறி
வியல் நிலையத்தில் நடைபெற்றது.  

கூட்டத்திற்கு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் திருச்செல்வம், ஐக்கிய விவசாய சங்கத்தின் தலைவர் வையாபுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயற்கை வேளாண்மை துறை தலைவர் சோமசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். மண்வளத்தை கூட்டுவது, நெல் சாகுபடியில் சத்துக்களை நிர்வகிப்பது, களைகளை மேலாண்மை செய்வது, பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவது, மதிப்புக் கூட்டி நெல் வகைகளை விற்பனை செய்வது என்பது குறித்தும், பஞ்சகாவியம், ஜீவாமிர்தம், மண்புழு உரம், ஊட்ட மேற்றிய தொழு உரம், மூலிகை பூச்சு விரட்டி உள்ளிட்டவைகள் எப்படி தயாரிப்பது என்பது குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டு நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், இயற்கை நெல் சாகுபடியில் பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து வேளாண் துறையினர் பயிற்சி அளித்தனர்.

Tags : Central Government ,
× RELATED குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.....