மீன்பிடி தொழில் பாதிப்பு

கடலூர், செப். 20: கடந்த 10 நாட்களாக கடலூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வறண்டு கிடந்த நீர்நிலைகள் நிரம்ப தொடங்கியுள்ளன.இந்நிலையில், நேற்று முன்தினம் கடலூர் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியது. நேற்று காலை புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டது.இதனால் மீனவர்களும் பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர். இருப்பினும் நேற்று முன்தினம் இரவு முதல் கடலூர் மாவட்ட கடல் பகுதி சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது.  ராட்சத அலைகள் கடலில் பலத்த சத்தத்தோடு கரைகளின் மீது மோதி வருகின்றன. கடலில் அதிவேக நீரோட்டம் தென்படுவதால் மீனவர்களுக்கு போதிய மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் பெரும்பாலான படகுகள் கரை திரும்பின.கடல் சீற்றம் காரணமாக கடலூர் சில்வர் பீச், சோனங்குப்பம்உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
× RELATED திருநங்கைகளால் போக்குவரத்து பாதிப்பு