×

வத்திராயிருப்பு 10வது வார்டில் கழிப்பறை மராமத்து பணி தொடங்கியது

வத்திராயிருப்பு, செப். 19: பெண்கள் போராட்டத்தையடுத்து வத்திராயிருப்பில் பெண்கள் கழிப்பறை மராமத்து பணி துவங்கியது.வத்திராயிருப்பு பேரூராட்சியில் 10வது வார்டில் பெண்கள் கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறையை முறையாக பராமரிக்காததால் பயன்படுத்த முடியவில்லை. கடந்த மூன்று மாதமாக பெண்கள் திறந்தவௌியை பயன்படுத்தும் அவலநிலை ஏற்பட்டது. குறிப்பாக மழைக் காலங்களில் பெண்கள் பெரும் அவதிபடுகின்றனர். எனவே கழிப்பறையை மராமத்து செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு 9, 10, 11 வார்டுகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் திரண்டு கழிப்பறையை பராமரிக்கக் கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இதில் திமுக  முன்னாள் கவுன்சிலா் மாரிமுத்து, மார்க்சிஸ்ட் மணிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா். வௌியூரிலிருந்த செயல் அலுவலர் கண்ணன் பொதுமக்களிடம் செல்போனில் பேசி கழிப்பறையை மராமத்து பணி துவக்கப்படும் என உறுதியளித்தார். இதனை ஏற்று போரட்டத்தை பெண்கள் கைவிட்டனர்.தினகரன் செய்தி படத்துடன் வௌியிட்டதின் எதிரொலியாக 10வது வார்டு பெண்கள் கழிப்பறை மராமத்து பணி தொடங்கியது.

Tags : ward ,
× RELATED திருத்துறைப்பூண்டி 17வது வார்டு...