×

கோஆப்டெக்ஸில்

சாயல்குடி, செப்.19:  ராமநாதபுரம் கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை நேற்று கலெக்டர் வீரராகவராவ் துவங்கி வைத்தார். அவர் கூறும்போது, ‘‘தமிழ்நாடு அரசு கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் மூலம் பட்டு, பருத்தி, கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பலவித வண்ணம் மற்றும் வடிவமைப்புகளில் பருத்தி, பட்டு சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் உடல் நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் எற்ப ரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியைக் கொண்டு இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் புடவை ரகங்கள், பாரம்பரியத்தை போற்றும் விதமாக கண்டாங்கி சேலைகள், செட்டிநாடு சேலைகள், கைத்தறி சுங்கிடி சேலைகள், மதுரை, தஞ்சாவூர் ஸ்லப்காட்டன் சேலைகள், ஈரோடு காதா டிரைசனர் போர்வைகள், பருத்தி மட்டும் பட்டு, பரமக்குடி 1000 புட்டச் சேலைகள், ஆண்களுக்கு லினன் சட்டைகள், லினன் பருத்தி சட்டைகள், பாலி விஸ்கோஸ் பேண்ட் கிளாத்கள் விற்பனைக்கு உள்ளன. மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடியில் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்தாண்டு ராமநாதபுரம் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை ரூ.64.07லட்சமாகும். இந்தாண்டு ரூ.80 லட்சத்திற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது’’என்றார். தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் நாகராஜன், நிர்வாக குழு உறுப்பினர்கள் அய்யான், சங்கீதா, ராமநாதபுரம் மேலாளர் பாண்டியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை