×

100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் சாலைமறியல்

உசிலம்பட்டி, செப்.19:  உசிலம்பட்டி அருகே அல்லிக்குண்டம் ஊராட்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 100 நாள் வேலை கேட்டு நேற்று குடும்பத்துடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். உசிலம்பட்டி-பேரையூர் சாலை அ.பெருமாள்கோவில்பட்டி பஸ் நிறுத்தத்தில் நடைபெற்ற மறியலுக்கு மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சி உசிலம்பட்டி ஒன்றியச்செயலாளர் ராமர் முன்னிலை வகித்தார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. தகவல் அறிந்த உசிலம்பட்டி யூனியன் ஆணையாளர் பாலகிருஷ்ணன், வி.ஏ.ஓ சக்திகுமார், சேடபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். யூனியன் ஆணையாளர் பாலகிருஷ்ணன், புதிய வேலைக்கான உத்தரவு வந்துவிடும். இதனால் இன்று அனைவருக்கும் வேலை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து வேலை வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர்.



Tags :
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக...