×

அக்.1 முதல் விவசாயிகளிடம் பாசிப்பயறு கொள்முதல்

மதுரை, செப்.19: விவசாயிகளிடம் பாசிப்பயறு கொள்முதல் செய்யப்படும் என மதுரை மாவட்ட கலெக்டர் ராஜசேகர் ெதரிவித்துள்ளார்.மதுரை மாவட்ட கலெக்டர் ராஜசேகர் விடுத்துள்ள அறிக்கையில், மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் விளைவித்துள்ள பாசிப்பயறுக்கு கிலோ ரூ.70.50 வீதம் விலை நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை திருமங்கலம், உசிலம்பட்டி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொள்முதல் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் சிட்டா அடங்கல், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் பதிவு செய்து பாசிப்பயறை வழங்க வேண்டும். பயறின் ஈரப்பதம், கலப்பு இல்லாத தன்மை உள்ளிட்ட தரம் பரிசோதனை செய்து விற்பனைக்கு அனுமதிக்கப்படும். அக்டோபர் 1 முதல் டிசம்பர் 29ம் தேதி வரை கொள்முதல் செய்யப்படும். பெறப்படும் பாசிப்பயறுக்கு உரிய பணம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக...