பட்டப்பகலில் பரபரப்பு மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

மதுரை, செப்.19: மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் பைகள் தவிர்ப்பது குறித்து அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை கமிஷனர் விசாகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளியில் துவங்கி பள்ளிவாசல் தெரு, கீழ மாசி வீதி, அம்மன் சன்னதி, மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதி வழியாக மீண்டும் பள்ளிக்கு வந்தடைந்தது. இதில் சுமார் 350 மாணவர்கள் பங்கேற்றனர்.  இப்பேரணியின்போது பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பு மற்றும் பிளாஸ்டிக் பைகள் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு கடைகளிலும் துண்டு பிரசுரங்களும், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை கலெக்டர் ராஜசேகர், கமிஷனர் விசாகன் ஆகியோர் வழங்கினர்.  துணை கமிஷனர் நாகஜோதி, உதவி கமிஷனர் பிரேம்குமார், நகர்நல அலுவலர் (பொ) வினோத் ராஜா, கல்வி அலுவலர் விஜயா உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: