×

ஜவ்வாய் இழுக்கும் சாலை பணி சென்ட்ரல் மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்திற்கு இணையாக பல்லாரி ெவங்காயம் விலை உயர்வு

மதுரை, செப்.19: மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்திற்கு இணையாக பல்லாரி வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. நேற்று  கிலோ ரூ.35க்கு விற்பனையானது. மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு ஊட்டி, கொடைக்கானல், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் காய்கறிகள் வருகின்றன. சென்ட்ரல் மார்க்கெட்டில் நேற்று காய்கறிகளின் வரத்து அதிகமாக இருந்தது. தேவை அதிகமானதால், விலை உயர்வு இல்லாமல் ஒரே சீராக இருந்தது.  மார்க்கெட்டில் நேற்றைய விலை (ஒரு கிலோவிற்கு): கத்திரிக்காய் ரூ.18, தக்காளி ரூ.10, பச்சைமிளகாய் ரூ.25, பல்லாரி ரூ.35, சின்னவெங்காயம் ரூ.35, உருளைக்கிழங்கு ரூ.20, சேனைக்கிழங்கு ரூ.40, கருணைக்கிழங்கு ரூ.25, சேம்பு ரூ.30, பீன்ஸ் ரூ.40, கேரட் ரூ.20, காளிப்பிளவர் ஒரு பூ ரூ.20, நூக்கல் ரூ.20, டர்னிப் ரூ.25, பட்டர் ரூ.120, சோயாபீன்ஸ் ரூ.90, பச்சை பட்டாணி ரூ.80, அவரை ரூ.20, பீட்ரூட் ரூ.20, முள்ளங்கி ரூ.15, வெண்டைக்காய் ரூ.18, பூசணிக்காய் ரூ.12, முருங்கைகாய் (கிலோ) ரூ.30, முட்டைகோஸ் ரூ.15, பச்சைமொச்சை ரூ.30, சவ்சவ் ரூ.15, கருவேப்பிலை ரூ.25, மல்லி ரூ.15, புதினா ரூ.25, இஞ்சி ரூ.175, புதிய இஞ்சி ரூ.50, கோவைக்காய் ரூ.25, என காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது.   சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் முருகன் கூறுகையில், ‘பெரிய வெங்காயமான பல்லாரி விலை சின்ன வெங்காயத்தின் விலைக்கு இணையாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.20க்கு விற்பனையான பல்லாரி தற்போது ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் வரத்து குறைவால் இந்த விலை ஏற்றம்’ என்றார்.

Tags : Pallai ,road ,Indian ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...