பழநி கோயிலில் நவராத்திரி விழா செப்.29ல் காப்புகட்டுதலுடன் துவக்கம்

பழநி, செப். 19: பழநி கோயிலில் நவராத்திரி விழா செப்.29ம் தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்க உள்ளது.பழநி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று நவராத்திரி. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழா வரும் செப்.29ம் தேதி மலைக்கோயிலில் காப்புகட்டுதலுடன் துவங்க உள்ளது. விழா நடைபெறும் 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோயிலில் பக்திச் சொற்பொழிவு, மங்கள இன்னிசை, பக்தி இன்னிசை, பரத நாட்டியம், கிராமிய நடனம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.விழாவின் 10வது நாளான அக்டோபர் 8ம் தேதி மலைக்கோயிலில் பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். பிற்பகல் 2.45 மணிக்கு மலைக்கோயிலில் இருந்து பராசக்திவேல் பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 5 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி கோதைமங்கலம் புறப்பட்டு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சியில் பழநி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெறும்.

Advertising
Advertising

Related Stories: