பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி அக்.25ல் சிறை நிரப்பும் போராட்டம் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கம் அறிவிப்பு

திண்டுக்கல், செப். 19: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதிலும் அக்.25ல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட கிளை செயலாளர் ரவிச்சந்திரன் அளித்த செய்தி அறிக்கை: கடந்த 14.9.2019 அன்று தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஈரோட்டில் மாநில தலைவர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 4 அம்ச கோரிக்கைகளான, விற்பனையாளர்கள் சம்பள உயர்வு தொடர்பாக கமிட்டி கொடுத்த அறிக்கையின்படி ஊதிய உயர்வு உடனே அறிவிக்கப்பட வேண்டும். செயலாளர்கள் பொது பணிநிலைத்திறன் உத்தரவிலுள்ள குறைகளை கலைந்த பின்னர் அமல்படுத்த வேண்டும். பணி வரன்முறைபடுத்தாத பணியாளர்களின் பணியினை வரன்முறைபடுத்தி பதவி உயர்வு அளிக்கவும், அவர்களது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். நீண்ட வருட கோரிக்கையான ஓய்வூதிம் உடனே அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 6 கட்டங்களாக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வரும் செப்.23ம் தேதி முதல் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்தல். இதையடுத்து செப்.30ம் தேதி சேலத்தில் மாநிலம் தழுவிய உண்ணாவிரதம். தொடர்ந்து அக்.14ம் தேதி மதுரை அல்லது சென்னையில் குடும்பத்துடன் பேரணி நடைபெறும். அக்.21ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தம், அக். 25ம் தேதி முதல் வாழ்வா சாவா என்ற நிலையில் சிறை நிரப்பும் போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் நியாய விலைக்கடை பணியாளர்கள் உட்பட சுமார் 50 ஆயிரம் பணியாளர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தங்கரத புறப்பாடு நிறுத்தம் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வரும் செப்.29ம் தேதி முதல் அக்.8ம் தேதி வரை 10 நாட்களுக்கு மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தம் செய்யப்படும். அதன்பின் அக்.9ம் தேதி வழக்கம்போல் தங்கரத புறப்பாடு நடைபெறும்.

Advertising
Advertising

Related Stories: