×

திண்டுக்கல் பூதமரத்துபட்டியில் யோக விநாயகர் சிலை பிரதிஷ்டை

திண்டுக்கல், செப். 19: திண்டுக்கல் அடுத்த பள்ளப்பட்டி ஊராட்சி, பூதமரத்துபட்டியில்  யோக விநாயகர் பிரதிஷ்டை, பூர்ணாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் திரிதியை திதியும், அசுபதி நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய சுபதினத்தில்  யோக விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 5 மணியளவில் சங்கல்பம், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், குபேர ஹோமம் நடைபெற்றது. பின்னர் பூரணகும்பம் கோயிலை சுற்றி வந்து யோக விநாயகருக்கு பூர்ணாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 16 வகையான அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Tags : Ganesha ,Dindigul ,
× RELATED பதினோரு விநாயகர்களின் பரவச தரிசனம்