திண்டுக்கல்லில் உழவர் உற்பத்தியாளருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

திண்டுக்கல், செப். 19: திண்டுக்கல் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) கீழ் உள்ளவர் மையத்தில் உழவர் உற்பத்தியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இதில் வேளாண்மை துணை இயக்குனர் விஜயராணி தலைமை தாங்கி பேசுகையில், ‘மகளிர் குழுவில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து வேலை செய்தால்தான் வருமானத்தை அதிகரிக்க முடியும். அரசு நமக்கு தரும் நிதியோடு குழுவில் உள்ளவர்கள் தங்களால் முடிந்த அளவு நிதியிணையும் சேர்த்து, தற்போது மழை பெய்ய ஆரம்பித்து உள்ளதால் துவரை, தட்டப்பயறு, தக்காளி, கத்தரி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு குழித்தட்டு முறையில் நாற்று போட்டு தருதல், அசோலா வளர்த்து விற்பனை செய்தால்,

மண்புழு உரம் தயாரித்தல், காளான் வளர்ப்பு போன்றவற்றை செய்தால் வருமானம் அதிகரிக்கும்’ என்றார்.

பின்னர் வட்டார தொழில்நுட்ப ஆலோசனை குழு ஒருங்கிணைப்பாளர் நாகேந்திரன், மண் மாதிரி எடுக்கும் முறை பற்றியும், அதனடிப்படையில் உரமிடும் போது தேவையில்லாத உரச்செலவு குறையும் என்றும், விதை

விதைக்கும் முன் விதை நேர்த்தி செய்து விதைத்தால் நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை காப்பாற்ற முடியும் என்றும், குறிப்பாக அமெரிக்கன் படைப்புழுவில் இருந்து மக்காச்சோளத்தை காப்பாற்ற முடியும் என்றும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை எடுத்து கூறினார். தொடர்ந்து பிக்கோ புரஜக்டர் மூலம் புதிய தொழில்நுட்பங்களை வீடியோ காண்பிக்கப்பட்டது. இதில் வெள்ளோடு, பெரியகோட்டையை சேர்ந்த பண்ணை மகளிர் குழுவினர் கலந்து கொண்டார்கள். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருண்குமார், நித்யா செய்திருந்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Related Stories: